'நம்மை நாமே தத்தெடுப்போம்' என்ற திட்டத்தில் எம் புதிய தலைமுறையினரின் கல்விக்கு உதவ விரும்பினால் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம். ChangesDo Foundation

Tuesday, January 22, 2019

Mission 2030 of ChangesDo Foundation

Mission 2030

'நூன்', எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுபவற்றின் மீதும் சத்தியமாக! (அல் குர்ஆன் 68: 1)

2030 ம் ஆண்டை நோக்கிய எமது திட்டங்கள்

Mission 2030 வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உறுவாக்குவோம்
2030ம் ஆண்டாகும் போது எமது முக்கிராமத்தில் கல்வி மருமலர்ச்சி ஏற்பட்டிருக்கவேண்டும்.

வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள் என்ற விகிதத்தில் அந்த கல்வி எழுச்சி இருத்தல் வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

2030 மிசனை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதை இப்போதிலிருந்து ஆதாவது கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்னிருந்தே சிந்தித்து அதற்கான திட்டங்களை செயலுருப்படுத்த நாம் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.

2030ல் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை எப்படி உறுவாக்கமுடியும்......?
இது ஒரு சாத்தியமா?
எப்படி?
என்ற கேள்விகள் பலருக்குள்ளும் தோன்றும்,இது சாத்தியமானதே, உலகின் பல பகுதிகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே சாதித்துவிட்டனர் பலர்.
நாம் தாமதமாக வந்திருக்கின்றோம். ஒவ்வொரு திட்டங்களையும் மிக நுனுக்கமாக, கூட்டாக இணைந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்

இன்க்ஷா அல்லாஹ்.

2030 ல் வீட்டுக்கு வீடு கல்விமான்களை உறுவாக்குதல் என்ற இந்த கோசத்தை செயலுறுப்படுத்த பல அனுபவசாலிகள் கல்விமான்களை இணைத்துக்கொண்டு பயணிக்க தயாராகிவருகின்றோம்.

எமது பிரதேசங்களில் இயங்கி வரும் பாலர் பாடசாலைகள் தொடக்கம் வீடுகளில் நல்ல கல்விச் சூழலை உண்டுபண்ணுதல் என்பதிலிருந்து எமது பணி தொடங்கவேண்டும்.

புரிந்துகொள்ளத்தெரியாமல் வாழ்கின்றான் மனிதன்
புரிந்துகொள்ளத் தெரியாமல் படிக்கின்றான் மாணவன்
வாசிக்கத்தெரியாமல் தேசிய பரீட்சையில் தோற்றுகின்றான் மாணவன்
இந்த கவலைகரமான நிலைமைகளை மாற்றவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளைத் தான் #'மாற்றங்கள்_ தேவை' என்ற இந்த பத்திரிகை மாதாந்தம் உங்கள் வீடுதேடி வறுகிறது.

ஆசிரியர் கருத்து ஒக்டோபர்; 2018

No comments:

Post a Comment

Mission